››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/10/03]

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் இக்ராம் உல் ஹக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (ஒக்டோபர், 03) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும் இச்சந்திப்பில் பாகிஸ்தான் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் கலாநிதி சஹீத் அஹ்மத் ஹஷ்மத் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாக்கிஸ்தான் பாதுகாப்பு செயலாளர், 5 வது சுற்று பாகிஸ்தானிய-இலங்கை இராணுவ பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் உயர்மட்ட குழுவினருக்கு தலைமை வகிக்கின்றார். இப்பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், இரு நாடுகளின் இராணுவத்தினரிடையே தொழில்முறை மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவது ஆகும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்