››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிறுவர் தின கொண்டாட்டங்களில் இராணுவத்தினரும் இணைவு

சிறுவர் தின கொண்டாட்டங்களில் இராணுவத்தினரும் இணைவு

[2018/10/04]

உலக சிறுவர் தினத்தையொட்டி கடந்த வாரம் முழுவதும் இலங்கை இராணுவத்தினரால் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு அமைவாக கிளிநொச்சியில் சிறுவர் தின நிகழ்வுகள் பல கடந்த திங்கள்கிழமையன்று (ஒக்டோபர், 01) இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குறைந்த வருமானங்களை பெரும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆரம்ப பண வைப்புடன் கூடிய சேமிப்பு கணக்கு புத்தகம் படையினரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் வங்கி அனுசரணை வழங்கியது. மேலும் கனகபுரம் - மகாதேவ சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சுமார் 185 சிறுவர்களுக்காண மதிய போசன நிகழ்வு ஒன்றும் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அதேவேளை, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான கலை நிகழ்வுகளும் ஏற்பாடு அங்கு செய்யப்பட்டிருந்தன.

மேலும், இதுபோன்று குறைந்த வருமானங்களை பெரும் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்கள் பரிசளிக்கும் நிகழ்வு விஸ்வமடு தொட்டாடி சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. அத்துடன் கந்தாவலி, ரங்கன் முன்-பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டிகளும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. அத்துடன் மன்டி முன்-பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்பு பண்டங்கள் ஆகியன படையினரால் வழங்கப்பட்டன.

பன்னன்கண்டி - பரந்தன், மல்லோவாலால் முன் பள்ளிகலைச் சேர்ந்த 14 குழந்தைகளுக்கு வைப்புத்தொகைகளுடன் சேமிப்புக் கணக்கு புத்தகங்கள் மற்றும் கற்றல் உபரனங்கள் ஆகிய படையினரால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், மாங்குளம் சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்காண மதிய போசன விருந்து ஒன்றும் படையினரால் வழங்கப்பட்டன.

இதேவேளை, யாழ் தீபகற்பத்தில் உள்ள படையினரால் மிரிசுவில் கரம்பகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபரனங்கள் மற்றும் காலணிகள் என்பன கடந்த திங்களன்று (01)வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்விற்கு ஷட்டர் ஒப் தி சைலன்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியது. மேலும் இந் நிகழ்வின்போது மாணவர்களுக்கு மதிய உணவும் படையினரால் வழங்கி வைக்கப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்