இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிரிகெட்
சுற்றுப்போட்டி
[2018/10/05]

கிளிநொச்சி பாதுகாப்பு படை
தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தினர் விஸ்வமடு மத்திய கல்லூரி மைதானத்தில்
கிரிகெட் சுற்றுப்போட்டி ஒன்றினை நேற்று (ஒக்டோபர், 03) ஏற்பாடு
செய்திருந்தனர்.
ஒன்பது கழகங்கள்
கலந்துகொண்ட இச்சுற்றுப்போட்டியில் விஸ்வமடு மத்திய கல்லூரி விளையாட்டு
கழகம் மற்றும் விஸ்வமடு தொரல்கள் விளையாட்டு கழகம் ஆகியன இறுதி
சுற்றுப்போட்டிக்கு தெரிவாகின. பின்னர் இவற்றில் விஸ்வமடு மத்திய கல்லூரி
விளையாட்டு கழகம் வெற்றி பெற்றதுடன், இறுதியில் விளையாட்டு அமைச்சினால்
வழங்கப்பட்ட விளாயாட்டு உபகரணங்கள் இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்ட
விளையாட்டு சங்கங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதேவேளை இசைக்கச்சேரி
நிகழ்வுகளும் இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்டது. இனிகழ்வில்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர்
கலந்துகொண்டனர். |