››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விமானப்போக்குவரத்து பிரிவவினால் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்ட நிகழ்வு

பாடசாலை மாணவர்களுக்கு விமான போக்குவரத்துத்துறை தொடர்பான விழிப்புணர்வு திட்டம்

[2018/10/06]

அண்மையில் (ஒக்டோபர், 05) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் போக்குவரத்து துரையினால் ஏற்பாடு செய்யப்படிருந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.

கோட்டே மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த 150 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வு எயார்போர்ட் மற்றும் ஏவிஏசன் (இலங்கை) லிமிடெட், இலங்கை எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை கேடரிங் ஆகிய நிறுவனங்களின் ஒத்துளைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது உரைநிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், பல்வேறு துறைகளில் ஏராளமாக வேலைவாய்ப்பு வாய்ப்புகள் காணப்படுவதுடன், மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய ஒரு பிரிவாக விமானப் போக்குவரத்தும் திகழ்வதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், அதிக எண்ணிக்கையான சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் உட்பட தலைவர் திரு. ஆனந்த விமலசேன, விமானநிலையம் மற்றும் எயார்போர்ட் மற்றும் ஏவிஏசன் (இலங்கை) லிமிடெட் தலைவர், திரு சமன் எதிரிவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்