››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள படையினர் விரைவு

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள படையினர் விரைவு

[2018/10/08]

கடந்த சில தினங்களாக கிடைக்கப்பெற்றுவரும் அடைமழை காரணமாக நாட்டில் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கனமழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்கள் வரை தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்,மேற்கு , வட-மேற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கனமழையுடன் கூடிய காலநிலை காரணமாக பாராளுமன்ற சுற்றுச் சூழலில், வெள்ளத்தினால் ஏற்படும் அசௌகரியங்கள் தடுக்கும் வகையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள படைவீரர்கள் அப்பகுதியில் நேற்றைய தினம் முதல் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கேற்ப அவர்கள் தியவன்ன ஓயாவுக்கு குறுக்காக செல்லும் பாராளுமன்ற வீதி நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில் அவ்வீதியின் இரு மருங்கிலும் மண் மூட்டைகளை அடுக்கியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த வீதி வெள்ள நீர் காரணமாக நீரில் மூழ்குவதிலிருந்து பாதுகாக்கும் பணிகளிலும் மற்றும் அப் பகுதியில்ல் வெள்ள நீர் வழிந்தோடும் வகையிலான அனைத்து சாத்தியமான வழிகளை ஏற்படுத்தும் முயற்சிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கனமழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்ட மற்றுமொரு சம்பவத்தில், கடுகன்னவ பிரதேச செயலகத்தில் உள்ள பலன, கடகும்புர மற்றும் அமுனுபுர பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வீதிகளில் சரிந்து வீழ்ந்த மரங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படைவீரர்கள் உதவியளித்ததுடன் நிவாரண நடடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்