››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள் தாய்லாந்து பிரதிப் பிரதம மந்திரியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பிரவிட் வுங்சுவொன் அவர்களுடன் சந்திப்பு

[2018/10/10]

அண்மையில் (ஒக்டோபர், 08) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்து அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இராஜாங்க அமைச்சர் இவ்விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சின் தூதுக்குழுவில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலரும் உள்ளடங்குகின்றனர்.

இவ்விஜத்தின்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தாய்லாந்து நாட்டின் பிரதிப் பிரதம மந்திரியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பிரவிட் வுங்சுவொன் அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து செவ்வாய்க்கிழமை (09) அன்று சந்தித்தார். இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திரு. சுனில் சமரவீர, தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர் திருமதி.ஷேணுகா செனவிரத்ன அவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் தனது அழைப்பினை ஏற்று தமது நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டமைக்கு தாய்லாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு விழாவை கொண்டாடும் இவ்வேளையில் இரு நாடுகளுக்கிடையே நீண்டகால உறவினை கட்டிஎழுப்பு வதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இவ்வருடம் (2018) ஜூலை மாதம் தாய்லாந்தின் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட உபசரிப்பை பெரிதும் அவர் பாராட்டினார்.

இதன்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள் அந்நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ள அழைத்தமைக்கு அந்நாட்டு அரசிற்கு நன்றியை தெரிவித்தார். மேலும் இரு நாடுகளிடையே நிலவிவரும் நீண்டகால கலாச்சார, சமய மற்றும் வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், இலங்கை எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தக மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாக திகழும் என்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், 2019 இல் தாய்லாந்தில் இடம்பெற இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்திற்கு (ASEAN) தலைமை தாங்க இருப்பதை இட்டு அந்நாட்டுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ்விஜயத்தின்போது அந்நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் பார்வையிட்டார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்