››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஆசிய பசிபிக் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருது வழங்கும் விழாவில் பிரெய்லி எழுத்துக்களை ஆதரிக்கும் மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு விருது

ஆசிய பசிபிக் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருது வழங்கும் விழாவில் இலங்கையின் பிரெய்லி மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு விருது

[2018/10/16]

சீனாவின் குவாங்சூ நகரில் இம்மாதம் (ஒக்டோபர்) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை இடம்பெற்ற 18வது ஆசிய பசிபிக் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தினால் உருவாக்கப்பட்ட பிரெய்லி எழுத்துக்களை ஆதரிக்கும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் வருடத்தின் சிறந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

பிரெய்லி எழுத்துக்களை ஆதரிக்கும் புதிய மென்பொருள், கல்வி மற்றும் தொழில் துறைகளில் பார்வைக் குறைபாடுகளையுடைய மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முகம் கொடுக்கும் சிரமங்களுக்கு மிகப்பொருத்தமான தீர்வை வழங்குவதற்காக ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தினால் (CRD) உருவாக்கப்பட்டது.

இம்மென்பொருள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு தானியங்கி முறையில், செலவு குறைந்த, கைப்பற்றல் பயன்பாடு , டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகியவற்றுடன் பிரெயில் ஆவணங்களை சொந்த மொழியில் மொழிபெயர்க்கும் ஆற்றல் மிக்கது.

ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ள இப் புதிய மென்பொருள், பார்வை குறைபாடுள்ள சமூகம் குறிப்பாக பாடசாலைகள், உயர் கல்வி நிறுவனங்கள், இராணுவ புனர்வாழ்வு நிலையங்கள் மற்றும் கூட்டுநிறுவன அமைப்புக்கள் இத்துறையில் எதிர்கொள்ளும் தகவல் தொடர்பு பிரச்சினைகளுக்கு ஒரு பயனுள்ள தீர்வை வழங்கக்கூடியது.

போட்டியில் பங்கேற்ற அவுஸ்திரேலியா, ஜப்பான், புருனே, சீனா, சீன தைபே, ஹொங்கொங், இந்தோனேசியா, மக்காவோ, மலேசியா, மியான்மர், பாக்கிஸ்தான், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 16 நாடுகளில் இலங்கை ஒன்றாகும். இச் சர்வதேச நிகழ்வில் 776 போட்டியாளர்களும், 73 சர்வதேச மதிப்பீட்டாளர்களும் பங்கேற்றனர்.

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையம் (CRD) உலக தர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும் நோக்குடன் 2006 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளில் இவற்றின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்