››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்

முப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்

[2018/10/16]

முப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வொன்று அமைச்சின் வளாகத்தில் இன்றையதினம் (ஒக்டோபர்,16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர ஆகியோரும் காலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் படை வீரர்களுக்கான சேமலாப திட்டமான 'விரு தெடட சவிமத் ஹெடக்' திட்டத்தின் கீழ் இடம்பெற்றது. இதன்போது பலா, நெல்லி, நாக, தென்னை மற்றும் கும்புக் ஆகிய மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்படும் விவசாய திட்டங்களில் இது ஒன்றாகும். தேசிய உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இவ்வீரர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இப் பல்நோக்குத் திட்டம், ஓய்வுபெற்ற படை வீரர்களுக்களின் மேலதிக வருமானத்திற்கான மூலமாக அமைவதுடன் மரங்களை வளர்ப்பதற்கும் பின்தங்கிய பிரதேசங்களில் விவசாயம் சார்ந்த சமூக-பொருளாதார அபிவிருத்திக்கும் மூல காரணியாக அமையும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்