››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

9ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார் மாநாடு அடுத்தவாரம் ஆரம்பம்

9ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார் மாநாடு அடுத்தவாரம் ஆரம்பம்

[2018/10/17]

சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக் -2018” வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் (ஒக்டோபர்) 22திகதி நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் “கடல்சார் முகாமைத்துவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை கடற்படையின் பராக்கிரம கேட்போர்கூடத்தில் நேற்று (ஒக்டோபர், 16) இடம்பெற்றது. இவ் ஊடகவியலாளர் மாநாடு கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள சர்வதேச கடல்சார் மாநாட்டில் 50 நாடுகளின் கடல்சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படையினரால் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாடு இவ்வருடமும் ஒன்பதாவது தடவையாக இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சர்வதேச மாநாடு பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் களத்தில் பொதுவான சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்குதல் என்பன “கோல் டயலொக்” எனும் மாநாட்டினுடைய நோக்கமாக காணப்படுவதுடன், தேசிய மற்றும் சர்வேதேச பங்காளர்கள் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்வது இதன் நோக்கமாகும்.

கடந்த வருடம் இடம்பெற்ற 8 ஆவது “கோல் டயலொக்” “'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை'” என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் (ஒக்டோபர், 09, 10) நடைபெற்றதுடன், இச்சர்வதேச மாநாட்டில், 51 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்