››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

09 ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

09 ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

[2018/10/22]

“கோல் டயலொக் - 2018” எனும் வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (ஒக்டோபர், 22) இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாதுகாப்பு செயலாளர் வைத்தியரத்ன அவர்கள் முக்கிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார். மேலும் இங்கு ஜனாதிபதி அவர்களின் செய்தி வாசிக்கப்பட்ட பின்னர் இந்நிகழ்வினை நினைவு கூறும்வகையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் “கடல்சார் முகாமைத்துவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பல கடற்படை பிரதானிகள் உட்பட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சர்வதேச மாநாடு பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் களத்தில் பொதுவான சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்குதல் என்பன “கோல் டயலொக்” எனும் மாநாட்டினுடைய நோக்கமாக காணப்படுவதுடன், தேசிய மற்றும் சர்வேதேச பங்காளர்கள் கடல்சார் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கு ஒரு சிறந்த தளத்தினை அமைத்துக்கொடுப்பது இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ மற்றும் விமானப் படைத் தளபதிகள் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், விஷேட அழைப்பின்பேரில் வருகைதந்தோர் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்