››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடுகை

இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடுகை

[2018/10/29]

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'வனரோப' மர நடுகை திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் 'ரணவிரு ஹரித அரண' திட்டத்தின் இறுதி பிரிவின் கீழ் இலங்கை இரானுவத்தின் ஏழு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் நடுகை செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் அமைந்துள்ள இராணுவத்தின் மேனிக் பண்ணையில் இடம்பெற்ற இம்மர நடுகை திட்டத்தின் பிரதான நிகழ்வில் நமினம், லாவுல, கடுகுடா, சப்படிலா, வீரை, மயிர்கொட்டி, கூலை, நெல்லி , நாவல் போன்ற 150 பழ மரங்கள் நடப்பட்டன.

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாக்கும் தொடரான முயற்சியாக மர நடுகை திட்டங்களை இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப் பல்நோக்கு திட்டமானது முப்படை வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு மத்தியில் மர நடுகைய ஊக்குவிக்கும் திட்டமாக மட்டும் அல்லாமல் கிராமப்புற மக்களுக்கான வருமான மூலத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்