››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

[2018/10/31]

புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 31) பொறுப்பேற்றுகொண்டார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய செயலாளரை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்பிஆர் ராஜபக்ஸ அவர்கள் வரவேற்றார். பின்னர் தமது உத்தியோகபூர்வ அலுவலக அறைக்கு சென்ற செயலாளர் தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் நேற்றையதினம் ஜனாதிபதி அவர்களினால் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதானிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திரு. பெர்னாண்டோ அவர்கள் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகத்தர்களது பிரதம அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.

திரு. பெர்னாண்டோ அவர்கள், பிரதம மந்திரி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் செயலாளர், ஸ்ரீலங்கா டெலிகொம் லிமிட்டட், மக்கள் வங்கி மற்றும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் தலைவர், தபால் தொடர்பாடல் அமைச்சின் செயலாளர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், இரண்டு தசாப்தங்களாக ஸ்ரீலங்கா தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

திரு. பெர்னாண்டோ அவர்கள், கொழும்பு நாலந்த கல்லூரியின் பழைய மாணவராகும். அவர் 1971ம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் தெரிவாகிய அவர் பொருளியல் துறையில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.

பட்டப்படிப்பின் பின்னர் இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட அவர் தாய்நாட்டுக்காக பதினைந்து ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் அவர் கொமாண்டர் நிலை அதிகாரியாக கடற்படையில் இருந்து ஓய்வுபெற்றார்.

சிறந்த விளையாட்டு வீரரான திரு. பெர்னாண்டோ அவர்கள், பல்கலைக்கழக கிரிகெட் அணியின் தலைவராக செயர்பாட்டார். அத்துடன் அவர், புது டில்லியில் 1982ம் ஆண்டு இடம்பெற்ற தேசிய குறிபார்த்து சுடுதல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.

திரு. பெர்னாண்டோ அவர்கள், ஒரு பிரபலமான நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரியாகவும் , சமயோசித ஆளுமை கொண்ட சிறந்த முடிவை எடுப்பவராகவும் அறியப்படுகிறார். பின்தங்கிய நிலையில் காணப்பட்ட பல நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிறுவனங்களாக மாறுவதற்காக அவர் தலைசிறந்த மற்றும் தொலைநோக்குடைய மாற்றங்களை மேற்கொண்டார்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்