'சஹசக் நிமவும் - 2018' இல் இராணுவ
கண்டுப்டிப்பாளர்கள் பிரகாசிப்பு
[2018/11/03]

'சஹசக் நிமவும் - 2018'
கண்டு பிடிப்பாளர்களின் கண்காட்சி நிகழ்வில் இலங்கை இராணுவ
கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட
கண்டுபிடிப்புக்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை
சுவீகரித்துள்ளன. ஸ்ரீலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில்
(SLECC) அண்மையில் (செப்டெம்பர்,4-16) இடம்பெற்ற இக்கண்காட்சி நிகழ்வில் 29
இராணுவ கண்டுபிடிப்பாளர்களது காண்டுபிடிப்புக்கள் சமர்பிக்கப்பட்டதாக
இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கண்டுபிடிப்பாளர்கள்
ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கண்காட்சியில் 335 புதிய
கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இராணுவத்தின் ஆய்வுத் திட்டமிடல்
மற்றும் மேம்பாட்டுக் கிளையின் (RAP & D Branch) உதவியுடன் அனைத்து
பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திலிருந்தும் இலங்கை இராணுவ
கண்டுபிடிப்பாளர்கள் முதற்கட்டமாக 239 கண்டுபிடிப்புகளை
சமர்ப்பித்திருந்தனர்.
இலங்கையின் இராணுவ மகளிர்
அணியின் லான்ஸ் கோப்ரல் ஜே.சி.ஐ. நிஷாந்தியினால் கண்டுபிடிக்கப்பட்ட
உயிரியல் கழிவுகளின் மூலம் எரியும் எரிவாயு அடுப்பு தங்க பதக்கத்தையும்,
யானை விளக்குகள், மிதிவண்டிகளுக்கான தானியங்கி கியர் சிஸ்டம் மற்றும் மிடி
பேட் ஆகியன வெள்ளிப்பதக்கத்தையும் ஏனைய கண்டுபிப்புக்கள் 15 வெண்கலப்
பதக்கங்களையும் சுவீகரித்தன.
கண்டு பிடிப்புக்களுக்கான
விருதுகள் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் கடந்த வாரம் (ஒக்டோபர், 29) இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி
அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |