››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் வன்னி மாணவர்களுக்கு கல்விசார் உதவிகள்

இராணுவத்தினரால் வன்னி மாணவர்களுக்கு கல்விசார் உதவிகள்

[2018/11/30]

அண்மையில், இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலன்புரிசேவையின் ஒரு பகுதியாக வவுனியாவில் பின்தங்கிய கிராமப்புற பாடசாலையில் கல்வி பயிலும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கல்விசார் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒரு தொகுதி மாணவர்கள் நன்மையடைந்துள்ளனர். இதன்பிரகாரம், வவு/இடம்பகஸ்கட வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகை புத்தகப் பைகள், காலணிகள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை வன்னி பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினர் கடந்த திங்கட்கிழமையன்று (நவம்பர், 26) வழங்கிவைத்ததாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார்துறை நிறுவனத்தின் அனுசரணையுடன் அன்பளிப்பு செய்யப்பட்ட இன் நன்கொடைமூலம் இப்பாடசாளலையிலுள்ள வரிய மாணவர்கள் 71 பேர் பயனடைந்துள்ளனர். கிராமப்புறங்களில் பின்தங்கிய சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் இராணுவத்தினர் வழமையாக தமது ஒத்துழைப்புக்கள் மற்றும் உதவிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் என்பவற்றை நன்கொடைகளாக வழங்கிவருவதுடன், நாட்டின் பல பாகங்களிலும் கட்டடம், பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகளை புனர்நிர்மாணம் செய்தல், கல்வி புலமைப்பரிசில் வசதிகள் ஆகிய பல சேவைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்