››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரண உதவி

இராணுவத்தினரால் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரண உதவி

[2018/12/04]

வன்னி – பாதுகாப்பு படைத்தலைமையகம் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மற்றுமொரு சமூக நலன்புரி சேவையாக அப்பிராந்தியத்தில் தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வொன்றினை அண்மையில் (நவம்பர், 29) ஏற்பாடுசெய்திருந்தது.

இந்நிகழ்வு வெஹரதென்ன ரொஷான் மகாநாம வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. வன்னி – பாதுகாப்பு படை தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் சுமார் அறுபது மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியன இதன்போது வழங்கிவைக்கப்படதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதை ஒத்த நிகழ்வொன்றின் மூலம் மத்திய - பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஒரு தொகை கற்றல் உபகரணங்களை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேவையுடைய மாணவர்கள் அண்மையில் (நவம்பர், 30) அன்பளிப்பாக பெற்றுள்ளனர்.

இதற்கமைய, பண்டகிரிய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது, இம்மாவட்டத்தில் கல்வி பயிலும் ஒன்பது வெவ்வேறுபாடசாலைகளிலுள்ள சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 122 படைப்பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க “ஹோப் இஸ்கோப் பவுண்டேஷன்” இதற்கான அனுசரணையினை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஹோப் இஸ்கோப் பவுண்டேஷன் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்