››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையின் 68வது ஆண்டு நிறைவு தின வைபவங்கள் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பம்

கடற்படையின் 68வது ஆண்டு நிறைவு தின வைபவங்கள் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பம்

[2018/12/06]

இலங்கை கடற்படை அதன் 68 வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின்போது சமய விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதற்கேற்ப நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆம் திகதிகளில் வெலிசரையில் உள்ள இலங்கை கடற்படைக்கப்பல் கெமுனுவில் இரவுநேர பிரித் ஓதும் நிகழ்வும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 02ம் மற்றும் 03 ஆம் திகதிகளில் அனுராதபுரத்தில் உள்ள ஜெய ஸ்ரீ மஹா போதியில் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெறும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக ஏழாவது வருடமாகவும் இடம்பெறும் கொடிகளுக்கு ஆசீர்வாத விழாவின் சமய ஆராதனைகள், அடமஸ்தானாதிபதி, வட மத்திய மாகாண பிரதம சங்க நாயக்க தேரர், அதி வணக்கத்துக்குரிய கலாநிதி பல்லேகம சிரினிவாச நயாக தேரர் மற்றும் மகா சங்க நாயக்கத்தினர் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டன. இவ்வைபவத்தில் தேசிய கொடி, பௌத்த சமய கொடி, கடற்படை பொறியாளர் மற்றும் கடற்படைக் கட்டளையகங்களின் கொடிகள், நிறுவனங்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் என்பவற்றின் கொடிகள் உட்பட 77 கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படைப் பிரதானி, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் ஏனைய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்துடன் கடற்படை பௌத்த சம்மேளத்தினால் 'கப்ருக் பூஜா பின்கம' நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கை கடற்படை தனது 68வது ஆண்டு நிறைவை எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர். 09) கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்