››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ வீரர் தெற்கில் இருந்து வடக்கு வரையான சக்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்தார்

இராணுவ வீரர் தெற்கில் இருந்து வடக்கு வரையான சக்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்தார்

[2018/12/05]

இலங்கை இராணுவத்தின் அங்கவீனமுற்ற இராணுவ வீரர் தமது சக்கர நாற்காலி மூலம் தெற்கின் தேவேந்திர முனையிலிருந்து வடக்கின் பருத்தித்துறை வரை செல்லும் பயணத்தை ஆரம்பித்துள்ளார். சர்வதேச வலுவிழந்தோர் தினத்தையொட்டி 6கஜபா படைப்பிரிவின் வீரரான கோப்ரல் கெமுனு கருணாரத்னவினால் இச்சாகச பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்ரல் கருணாரத்ன, மகா சங்கத்தினர் மற்றும் பிற மதத்தலைவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் கடந்த திங்கள் கிழமை (டிசம்பர், 03) காலையில் தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலுக்கு முன்பாக தமது பயணத்தை ஆரம்பித்தார். அவர் இப்பயணத்தின்போது 576 கிலோ மீற்றர் தூரத்தை சுமார் எட்டு நாட்களில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 07ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தின்போது தனது கால்கள் இரண்டையுமே இழந்த தைரியமிக்க படை வீரரை வாழ்த்துவதற்காகவும் , பயணத்தை தொடக்கி வைப்பதற்காகவும் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் வருகை தந்திருந்தார். வரலாற்றில் இதுபோன்ற பயணம் இராணுவ வீரர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதற்தடவை ஆகும்,

வாழ்க்கையில் வெற்றி விரும்பிய இவ் இராணுவ வீரர் போர்முனைகளில் அவரது கைகால்களை இழந்த போதும் கூட நம்பிக்கை இழக்கவில்லை. அவர் சக்கர நாற்காலி விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துள்ளதுடன் ரெஜிமெண்டல் விளையாட்டு நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டில், அவர் பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக பங்கொல்லை 'அபிமன்சலா -3' ற்கு சென்றார், பின்னர் திருமணம் செய்த அவர் ஒரு குழந்தையின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்