››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2018/12/08]

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (NMA) வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர், 07) இடம்பெற்ற கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் மாலை வேளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 58வது ஆட்சேர்ப்பில் இருந்து 34 பயிலுனர் அதிகாரிகளும் 56வது ஆட்சேர்ப்பில் இருந்து 2 அதிகாரிகளுமாக மொத்தம் 36 அதிகாரிகளுக்கு ஆணை அதிகாரமளிக்கப்பட்டது.

இங்கு உரைநிகழ்த்திய செயலாளர் பெர்னாண்டோ அவர்கள் மனிதாபிமான நடவடிக்கையில் கடற்படை தொண்டர் படையின் அதிகாரியாக செயற்பட்டதை நினைவுகூர்ந்த அதேவேளை, தான் ஒரு பாதுகாப்பு செயலாளராகவோ அல்லது பிரதம அதிதியாகவோ மட்டுமல்லாது உங்களில் ஒருவனாக இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தனது சேவைக்காலத்தில் இடம்பெற்ற யுத்த கள அனுபவங்களை பகிந்துகொள்ளும்போது, 1985 ஆம் ஆண்டு குச்செவெளியிலுள்ள கடற்படை முகாம் மாலையிலிருந்து மறுநாள் விடியும்வரை எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இறுதியில் கடற்படையினரால் அதனை முறியடிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார் துணிச்சல் மற்றும் தைரியமே இவ்வெற்றிக்கு வழிவகுத்ததாகவும், இவ்வாறான பண்புகளை பயிற்சியினூடாகவே பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்ததார்.

புதிதாக ஆணை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளிடம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறும், கடற்படைக் கொடியை தங்கள் முன்னோடிகளை கௌரவப்படுத்துவதற்கு மட்டுமல்லாது நாட்டு மக்களை கௌரவப்படுத்துவதற்கும் பறக்கவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், மத தலைவர்கள், கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், வெளியேறல் அணிவகுப்பில் கலந்துகொள்ளும் கடற்படை அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்