››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்கு பிராந்தியத்தில் காணி விடுவிப்பு

கிழக்கு பிராந்தியத்தில் காணி விடுவிப்பு

[2018/12/11]

படையினரால் நேற்றைய தினம் (10, டிசம்பர்) திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கிழக்கு மாகாணத்தில் சுமார் 12 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்பட்டன. படையினரின் பயன்பாட்டில் இருந்த 12 ஏக்கர் பரப்பளவினை உள்ளடக்கிய நான்கு காணிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ரோஹித போகொல்லாகம அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு. என்.என் புஷ்பகுமார அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கல்லம்பட்டுவில் ஐந்து ஏக்கர் நிலமும், சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சித்தாரில் இரண்டு ஏக்கர் நிலமும், முதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட தோப்பூர் மற்றும் பாட்டாளிபுரம் ஆகியவற்றில் முறையே மூன்று ஏக்கர் மற்றும் இரண்டு ஏக்கர் நிலமும் ஜனாதிபதி விஷேட செயலணியின் பணிப்புரைக்கு அமைவாக விடுவிக்கப்பட்டுள்ளன. இக்காணிகள் முன்னர் பாதுகாப்பு தேவைகள் நிமித்தம் படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்கள் 22வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களின் முன்னிலையில் காணிகளின் சட்டபூர்வ ஆவணங்களை வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்