››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானிய பிரதிநிதிகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு விஜயம்

ஜப்பானிய பிரதிநிதிகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு விஜயம்

[2018/12/11]

கடந்த வாரம் ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை (JCG) மற்றும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு (JICA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் ஏழு பேர்களைக் கொண்ட குழு எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் 'எண்ணெய்க் கசிவு முகாமை பயிற்சி' தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் பயிற்சி தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காகவும் இவ்விஜயத்தினை மேற்கொண்டதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விஜயம் இம்மாதம் 04ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரை இடம்பெற்றது.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் அதி விரைவு ரோந்து படகினைப் பயன்படுத்தி என்னைக்கசிவு சம்பவங்களை தடுக்கும் திறனை அதிகரித்தல் என்னைக்கசிவினை தடுத்து நிறுத்தும் குழுவினரின் திறனை மேம்படுத்தல் ஆகியன இப்பயிற்சியின் நோக்கங்களாகும். குறித்த பயிற்சியானது, இலங்கை அரசுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜப்பானிய அரசினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் வைஸ் அட்மிரல் இஷிமா டொஷிடக (ஓய்வு) மற்றும் ஜப்பான் கடலோர பாதுகாப்பு படைத் தளபதி மகொடோ தாமுற அவர்களின் தலைமையிலான குழுவினர், கொழும்பு கடலோர பாதுகாப்பு படை தலைமயகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், அதன் பணிப்பாளர் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்குழுவினர் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பினால் வழங்கப்பட்ட இரண்டு அதி விரைவு ரோந்து படகுகளுக்கு விஜயம்செய்து அங்குள்ள என்னைக்கசிவு தடுப்பு முகாமைத்துவ உபகரணங்களை பார்வையிட்டதுடன், இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பிரதான விலுள்ள கடலோர பாதுகாப்பு படை கப்பல் “திக்கோவிட்ட” பிரதான என்னைக்கசிவு தடுப்பு முகாமைத்துவ உபகரண களஞ்சியசாலையினையும் பார்வையிட்டனர். மேலும், இக்குழுவினர் அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் பாதிப்புக்குள்ளான பவளப்பாறைகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளையும் பார்வையிட்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்