››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சக்கர நாற்காலியில் பயணித்த படைவீரரின் பயணம் பருத்தித்துறையில் நிறைவு

சக்கர நாற்காலியில் பயணித்த படைவீரரின் பயணம் பருத்தித்துறையில் நிறைவு

[2018/12/12]

இலங்கை இராணுவத்தின் 6கஜபா படைப்பிரிவு படைவீரரான கோப்ரல் கெமுனு கருணாரத்னவினால் சக்கர நாற்காலியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சாகச பயணம் நேற்று (11, டிசம்பர்) யாழ் குடா நாட்டின் பருத்தித்துறையில் நிறைவு பெற்றது. கோப்ரல் கருணாரத்ன தென் மாகாணத்தில் இருந்து சுமார் 576 கி.மீ. தொலைவில் இருந்த தந்து கனவு இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்றாம் திகதி பயணத்தை ஆரம்பித்த படைவீரருக்கு சிறப்பான வரவேற்பளிப்பதற்காக பருத்தித்துறையில் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்தனர். கோப்ரல் கருணாரத்ன சர்வதேச வலுவிழந்தோர் தினத்தையொட்டி இப்பயணத்தை முன்னெடுத்திருந்தார். எட்டு நாட்களைக்கொண்ட இப்பயணத்தின் போது கோப்ரல் கருணாரத்னவிற்கு வீதியின் இரு மருங்கிலும் இருந்து பலர் உற்சாகம் மற்றும் மகத்தான ஆதரவளித்த அதேவேளை அவருக்கு இராணுவம் மற்றும் ஏனைய சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து உதவிகள் அளிக்கப்பட்டன.

கோப்ரல் கெமுனு கருணாரத்ன 2009ம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தின்போது தனது கால்கள் இரண்டையும் இழந்து சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப் பட்டபின் இராணுவத்தினரை பராமரிக்கும் பங்கொல்லை 'அபிமன்சலா -3' வின் அங்கத்தவராக இணைந்தார். அவர் தனது உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் சக்கர நாற்காலி விளையாட்டு போட்டிகள் மற்றும் ரெஜிமெண்டல் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். நாட்டின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு அவர் மேற்கொண்ட இச் சக்கர நாற்காலிப்பயணம் அவரின் தன்னம்பிக்கையையும் அர்பணிப்பையும் வெளிக்காட்டுகின்றது.

இக்குறித்த வீரரை வரவேற்க அட்ஜுடன் ஜெனரல் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி ஆகிய உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்