››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காடுகளை அதிகரிக்க விமானப்படையினரால் 'சீட் பாம்ஸ்” விதைப்பு

காடுகளை அதிகரிக்க விமானப்படையினரால் 'சீட் பாம்ஸ்” விதைப்பு

[2018/12/13]

இலங்கை விமானப்படையினர் வட மத்திய பிராந்தியத்தின் வனப் பகுதியில் உலங்குவானூர்தி ஊடாக (சீட் பாம்ஸ்) விதை குண்டுகளை இடுவதன் மூலம் காடுகளை அதிகரிக்கும் வகையிலான சிறந்த பணியினை நேற்று (டிசம்பர், 12) முன்னெடுத்துள்ளனர். நாட்டின் வனப்பகுதியினை அதிகரித்தல் மற்றும் மீட்டெடுத்தல் எனும் இலட்சியத்துடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நொச்சியாகம ரனொரவ வனப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலத்திற்கும் அதிகமான பகுதியில் சுமார் 5000 விதை குண்டுகளை வான் வழியாக இடுவதற்கு இலங்கை விமானப்படையின் எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிறந்த கூட்டு முயற்சி திட்டமானது இலங்கை விமானப்படை கட்டளையாக விவசாய பிரிவு, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் மாஸ் ஹோல்டிங் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2030ஆம் ஆண்டில் நாட்டில் தற்போதுள்ள 27 வீத வனப்பகுதியினை 32 வீத வனப்பகுதியாக அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இவற்றில் கரந்தா, மீ மற்றும் கும்புக் ஆகிய பல்வேறு வகையான மரங்களைக்கொண்ட விதை குண்டுகள் காணப்படுவதுடன் , வனப் பகுதியில் உலங்குவானூர்தி ஊடாக இதனை இடுவதுடன், முளைத்த பின்னர் உடனடியாக விதையின் வளர்ச்சிக்கு உதவும்வகையில் 48 வெவ்வேறு கூட்டுப்பசலைகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வனப்பகுதியை அதிகரிப்பதற்காக விமானப்படையினரால் முன்னெடுக்கப்படும் இவ்வகையான திட்டங்கள் தேசிய மரநடுகை முன்னெடுப்பினை பூர்த்திசெய்ய வழிவகுக்கும்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்