முக்கிய செய்திகள் ››

விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485

››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் குடும்பங்களுக்கு மேலும் இரு வீடுகள்

யாழ் குடும்பங்களுக்கு மேலும் இரு வீடுகள்

[2019/01/04]

இலங்கை இராணுவத்தின் படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு புதன்கிழமையன்று (ஜனவரி,02) வழங்கி வைக்கப்பட்டன. யாழ் தீபகற்பத்தில் கட்கோலம் மற்றும் ஆல்வாய் பகுதிகளில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கே குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த திட்டத்தினை ஹொரண, தலகல சர்வதேச பெளத்த தியான மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி வணக்கத்துக்குரிய தாளகல சுமரநாதன நயாக தேரர் மற்றும் திரு. தம்பியா ஆகியோரினால் அளிக்கப்பட சமூக நலன்புரி திட்ட அனுசரணையின் பயனாக இராணுவத்தினரால் பூரணப்படுத்த முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தின் படைவீரர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் மூன்று மாதங்களுக்குள் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. தகுதியுடைய குடும்பங்களுக்கான தனி வீடுகளை அமைக்கவும் உதவும் பாரிய அளவிலான வீட்டுத் திட்டங்களுக்கு இராணுவத்தினர் மனித வலு, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

குறித்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சச்சி, வடமராட்சி பிரதேச செயலாளர் திரு. அல்வி பிள்ளை சிறி, சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்