முக்கிய செய்திகள் ››

விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485

››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வன்னியில் பெண்னொருவருக்கு புதிய வீடு

[2019/01/08]

இலங்கை இராணுவத்தின் நலன்புரி சேவையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று வன்னி பிராந்தியத்தின் பின்தங்கிய கிராமத்தில் வசித்துவரும் வீட்டுத்தேவையுடைய பெண்னொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குருமன்காடு கிராமத்தில் வசிக்கும் திருமதி ஆர். ராசமலர் எனும் பெண்ணுக்கே கடந்தவாரம் (ஜனவரி, 03) இடம்பெற்ற நிகழ்வின்போது இப்புதிய வீடு வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சதஹம் சுவ’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டுக்குத் தேவையான கட்டட உபகரணங்களை வவுனியா பொது வைத்தியசாலையின் பௌத்த சங்கம் வழங்கியுள்ளது. எவ்வித உதவியுமற்ற இப்பெண் ஒரு தீராத நோயாளியாகவும் மற்றும் தான் வசிப்பதற்கு தேவையான ஒரு இடமும் இல்லாதிருந்தமையால் இப்பெண்ணுக்கு குறித்த வீட்டை நிர்மாணிக்க இச்சங்கம் அனுசரனை வழங்கியுள்ளது. குறித்த சங்கம் இப்பெருமதிவாய்ந்த திட்டத்திற்காக இராணுவத்தின் உதவியையும் நாடியுள்ளனர்.

இப்புதிய வீட்டினை பயனாளிக்கு வழங்கிவைக்கும் நிகழ்வில், மதத்தலைவர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் நன்கொடை நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்