முக்கிய செய்திகள் ››

விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485

››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்திகரிக்கும் இராணுவத்தினரின் பணி நிறைவு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்திகரிக்கும் இராணுவத்தினரின் பணி நிறைவு

[2019/01/08]

இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணறுகளை சுத்திகரிக்கும் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரனப்பணிகளை ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி, 06) நிறைவுசெய்துள்ளனர். இதன்பிரகாரம் கிளிநொச்சியில் 324 கிணறுகளும், முல்லைத்தீவில் 46 கிணறுகளும் சுத்திகரிப்பு செய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினரால் மாங்குளம், கிளிநொச்சி நகர பிரதேசம், முருசம்மோட்டை, கிளிநகர், பாரதிபுரம், மயிலாவனபுரம், தர்மபுரம், கண்டாவெலி, பூநகர், பனன்கன்டி, இந்திரபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள கிணறுகளை சுத்திகரிக்கும் பணிகளை மேற்கொண்டதுடன், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினரால் பேராறு, வசந்திபுரம்,தேராவில், ஒட்டுசுட்டான், நந்திக்கடல் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிநீர் கிணறுகளை சுத்திகரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்