››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தின் உதவியுடன் கண்டி வர்த்தக கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள்

இராணுவத்தின் உதவியுடன் கண்டி வர்த்தக கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள்

[2019/01/09]

நேற்றுக்காலை (ஜனவரி, 08) கண்டி நகரின் வர்த்தக கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து இராணுவத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டு மிக குறுகிய நேரத்திற்குள் ஸ்தலத்திற்கு விரைந்த கண்டியிலுள்ள இலங்கை சிங்கப் படைப்பிரிவின் இரண்டாவது தொண்டர் இராணுவ வீரர்கள் குழுவினர் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் மேலும் தீ பரவாது அதனை கட்டுப்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி யடினுவர வீதியிலுள்ள நான்கு மாடிக்கட்டடம் நேற்று காலை தீ விபத்துக்குள்ளாகியதுடன், அக்கட்டடத்திற்குள் சிக்குண்ட ஒரு குடும்பத்தினர் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் உதவியுடன் அதிஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்