››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் இலங்கை கடற்படையிரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

சுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் இலங்கை கடற்படையிரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

[2019/01/31]

கடுமையாக சுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் நேற்றய தினம் (ஜனவரி,30) சிகிச்சைகளுக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார். ரோயல் மலேசியன் கடற்படையின் "கே.டி. கஸ்தூரி" கப்பல் குழும வீரர்களில் ஒருவர் சுகவீனமுற்றுள்ளதாக இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து கடற்படை தலைமையகத்தின் கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக குறித்த ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் குறித்த சுகவீமுற்ற மலேசிய கடற்படை வீரர் கரைக்கு கொண்டுவரபட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த ரோயல் மலேசியன் கடற்படையின் "கே.டி. கஸ்தூரி" கப்பலுக்கு விரைந்து சென்று சுகவீனமுற்றிருந்த வீரரை அதிவிரைவு தாக்குதல் படகிற்கு மாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட வீரர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்