››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி

[2019/02/13]

அண்மையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் ஒரு தொகையினை வழங்கியுள்ளனர்.

நான்காவது கட்டமாக 'செனஹ சியபத' சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, இடர் முகாமைத்துவ அமைச்சு மற்றும் டயலோக் அக்சியடா ஆகிய நிறுவனங்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மான்குளம் வித்தியாலயம், பன்னன்காடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, திருமுருக்கண்டி வித்தியாலயம் மற்றும் நாடாளியாறு தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த சுமார் 423 மாணவர்களுக்கு கற்றல் உபகரண அன்பளிப்பு பொதிகளை வழங்கியுள்ளனர்.

இம்மாதம் 07ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் இவ் அன்பளிப்பு பொதிகளை வழங்கிவைக்கும் வகையிலான இரு வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்கை இராணுவத்தினர் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

அண்மையில் இப்பிராந்தியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இன் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்