››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனாதிபதி சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம்

[2019/02/26]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) முற்பகல், அநுராதபுரம் சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

படைப்பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை இராணுவ பணிக்குழாம் பிரதானியும் கஜபா படைப்பிரிவின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து அங்கவீனமுற்ற படையினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

அங்கவீனமுற்ற படையினருக்காக முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில் முகாம் வளாகத்தில் நாக மரக்கன்றொன்று நடப்பட்டது.

ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்காக பிரதேசத்திலுள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் முகாம் வளாகத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்களது பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.

சாலியபுர கிராம வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை நிறைவேற்றி கொடுப்பதற்காக வடமத்திய மாகாண ஆளுநரை இன்னும் சில தினங்களில் பிரதேசத்திற்கு அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி அவர்கள் பிரதேச மக்களிடம் உறுதியளித்தார்.

நன்றி: pmdnews.lkசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்