››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'மித்ர சக்தி ’ கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

'மித்ர சக்தி ’ கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

[2019/04/11]

இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி’ தியலாவையில் கடந்த திங்களன்று(ஏப்ரல், 08) நிறைவுபெற்றது. பெற்றது. நிறைவு தின வைபவங்கள் தாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டுப்பயிற்சியில் இந்திய தரப்பிலிருந்து 11 அதிகாரிகள் மற்றும் 109 படைச்சிப்பாய்கள் பங்கேற்ற அதேவேளை, உள்நாட்டு தரப்பிலிருந்து 10 அதிகாரிகள் மற்றும் 110 படைச்சிப்பாய்கள் பங்கேற்றனர்.

இரு வார கால எல்லை கொண்ட 'மித்ர சக்தி ’ கூட்டுப் பயிற்சி தொடர் ஏழாவது வருடமாக தியதலாவை, 1வது கெமுனு வாட்ச் படைப்பிரிவு வளாகத்தில் கடந்த மாதம் ஆரம்பமானது. இக்கூட்டுப்பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு படை நடவடிக்கைகள் தொடர்பாக தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் திறன்களை அதிகரித்தலுடன் இரு நாட்டு இராணுவத்தினரிடையே நிலவும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் தளத்தை வழங்கியது.

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் இக்கூட்டுப்பயிற்சியின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக தியத்தலாவை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந் நிகழ்வின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் இலங்கை இராணுவத்தின் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் SADAD குணவர்த்தன அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்