››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[April 30 2019]

இலங்கை இராணுவம் அதன் ஏழு அமைப்புகளினூடாக தீவிரவாதிகளை கைது செய்யும் வகையில் நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் படையினர் கடந்த 24 மணி நேரங்களாக தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டின் அனைத்து பாகங்களிலும் படையினர் பரவலாக பாதுகாப்பு பணிகளில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு சரியான பயனுள்ள தகவல்களை வழங்குவதன் ஊடாக அவசரகால சட்டத்தின் கீழ் விரைந்து செயற்படுவார்கள் என நேற்று (ஏப்ரல், 29) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது இராணுவ ஊடகப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நாட்டில் தற்போது வெளிவரும் பொய்யான வதந்திகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், ஏதாவது தகவல்கள் இருப்பின் அதனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கும் படியும் பொது மக்களை கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பொய்யான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக புதிய சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கடந்த கலங்களில் இராணுவத்தினர் நாட்டை பாதுகாப்பதற்கு முழு முயற்சியாக செயற்பட்டதை போன்றே தற்போது செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்