››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக சேதமடைந்த புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக கச்சதீவு தேவாலய புனரமைப்பு பணிகளில் ஈடுபட்ட அதே கட்டிடக் கலைஞர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சூரிய பண்டார நேற்று மாலை பாதுகாப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதும் கடற்படை மற்றும் விமானப்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கார், 02 மோட்டார் சைக்கிள்கள், ஒரு முச்சக்கரவண்டி என்பவற்றுடன், மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் என்பன மேலதிக விசாரணைக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்திலும் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான எழுத்து மூல ஆவணங்களுடன் நால்வரை கைது செய்துள்ளனர். இதேபோன்ற சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை கொழும்பில் கைதுசெய்தனர்.

ஏக்கல, ரத்தொளுகம மற்றும் வெலிமட ஆகிய பிரதேசங்களில் இலங்கை விமானப்படையினரால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஏக்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது

ஐந்து கையடக்க தொலைபேசிகள், ஒரு துப்பாக்கி, ஒரு வாள், இரண்டு பட்டாக்கத்தி, இரண்டு குறுந்தூர துப்பாக்கி ரவைகள், பத்து வெறுத்துப்பாக்கி ரவைகள், மூன்று கழித்த வெடிமருந்துகள் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் தொடர்பான வீடியோக்களை தமது கையடக்க தொலைப்பேசியில் வைத்திருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ரத்தொளுகமவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆறு வாள்கள், ஒரு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்தார். அத்துடன் கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்