››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஊடக அறிவித்தல்

ஊடக அறிவித்தல்

[2019/05/07]

பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன், வீடுகள், பொது இடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்பான காட்சிகள் ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்தப்படுவதனால் சிலவேளைகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எதுவித தொடர்புகளும் அற்றவர்கள் கூட அதில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் நிலை ஏற்படுவதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சமய தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இக்கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு சமூகத்தில் எந்தவொரு பிரிவினரும் அசௌகரியங்களுக்கு ஆளாக இடமளிக்காத வகையில் குறித்த சோதனை நடவடிக்கைகளை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது பாதுகாப்பு துறையினர் அல்லாத ஊடகவியலாளர்களையோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரையுமோ அதற்காக பயன்படுத்தாதிருக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் அனைத்து பாதுகாப்பு துறைகளுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

நன்றி: pmdnews.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்