››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

[2019/06/06]

மொறட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தின் நீண்ட கால தேவையை நிவர்த்திசெய்யும் வகையில் 120 மில்லியன் ரூபா செலவில் இத்தலைமையாக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு), முப்படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம மற்றும் சிவில் பாதுகாப்பு படை திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்