››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைத்தீவில் கடலோர பாதுகாப்பு படையினரால் உயிர்காப்பு பாடநெறி

[2019/06/11]

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் உயிர்காப்பு பாடநெறி தொடர்கள் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தப்பட்டது. குறித்த பாடநெறி தொடர்கள் 'ரட்ட வெனுவென் எக்கட சிட்டிமு' எனும் தேசிய திட்டத்திற்கு அமைய இம்மாதம் 03ம் திகதி முதல் 08ம் திகதி வரை முல்லைத்தீவில் நடாத்தப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலோர பாதுகாப்பு படை உயிர்காப்பு பயிற்சி பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்கள், தமது நிபுணத்துவத்தை மாவட்ட மக்களுக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் அவசரநிலை சூழ்நிலைகளில் பின்பற்றுவதற்கான முறையான நடைமுறைகள் மற்றும் உயிர்வாழ்வதற்கான வழிமுறைகளை கல்வி மற்றும் முறையான பயிற்சியின் மூலம் பயிற்றுவிக்கும் வகையிலும் குறித்த பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்