››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினர் காயமுற்ற மீனவரை கரைக்கு கொண்டு வந்தனர்

கடற்படையினர் காயமுற்ற மீனவரை கரைக்கு கொண்டு வந்தனர்

[2019/06/14]

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் காயமுற்ற மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இன்று (ஜூன், 14) கரைக்கு கொண்டுவரப்பட்டார். மேற்படி மீனவர் தொடர்பாக மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மீனவர் "ஜனித் புத்தா 02" மீன்பிடி படகின் மூலம் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் (08) சென்றிருந்தவர்களில் ஒருவராவார். கடற்படை படகின்மூலம் காலி கலங்கரை விளக்கிலிருந்து 33 கடல் மைல் தொலைவில் சென்று கடற்படை படகின் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்கென உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்