››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு

கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு

[2019/06/23]

ஜனாதிபதி வர்ண விருதும் வழங்கிவைப்பு

இலங்கை கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு, முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 4வது அதிவிரைவு ப்லோடில்லா என அதிகாரமளிக்கப்பட்டது. குறித்த படகிற்கு அதிகாரமளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (ஜுன், 22) திருகோணமலை கடற்படை தளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்துகொண்டார்.

திருகோணமலை கடற்படை தளத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வரவேற்றார்.

புதிதாக ஆணை அதிகாரமளிக்கப்பட்ட ப்லோடில்லா அதிவிரைவு தாக்குதல் படகிற்கு பெருமைக்குரிய ஜனாதிபதி வர்ண விருதும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

கடற்படையின் முதன்மை தாக்குதல் சக்தியாக திகழும் 4வது அதிவிரைவு தாக்குதல் படகான ப்லோடில்லா, அதன் வேகம், விரைவு தன்மை காரணமாக அது நாட்டின் கரையோர பாதுகாப்பில் ஒரு மேலாதிக உந்து சக்தியாக திகழ்கிறது.மேலும் இப்படகு, பயங்கரவாத யுத்தத்தின்போது கடல் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முக்கிய பங்கு வகித்தது.

இந்நிகழ்வில், மதத்தலைவர்கள், வடமாகான ஆளுநர், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிகையிலான கடற்படை வீரர்களும் கலந்துகொண்டனர்.

     
     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்