››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கு மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

வடக்கு மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

[2019/07/23]

இலங்கை இராணுவத்தினர் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் க.பொ.தா. உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பௌதிகவியல்பாட கருத்தரங்கொன்றினை அண்மையில் (ஜூலை, 19) ஏற்பாடு செய்திருந்தனர். முல்லியவெளி வித்தியானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கினை 59 பிரிவு மற்றும் 592 படைப்பிரிவுகள் ஏற்பாடு செய்திருந்ததாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கருத்தரங்கில், வித்தியானந்த தேசிய பாடசாலை, முல்லைத்தீவு வித்தியாலயம், வேம்மலை வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு வித்தியாலயத்தை சேர்ந்த சுமார் 150க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இக்கருத்தரங்கிற்கு இலங்கை வங்கியின் முல்லியவெளி கிளை அனுசரணை வழங்கியுள்ளது.

இப் பிராந்தியங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்