››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை - பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான 3வது நிபுணத்துவ மட்ட கலந்துரையாடல்

இலங்கை - பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான 3வது நிபுணத்துவ மட்ட கலந்துரையாடல்

[2019/07/25]

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான 3வது நிபுணத்துவ மட்ட கலந்துரையாடல் நேற்றையதினம் (ஜுன்,24) வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இரண்டு நாட்களைக் கொண்ட இந் நிபுணத்துவ மட்ட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமையன்று (ஜுன்,23) கொழும்பு லைட் ஹவுஸ் கெலியில் ஆரம்பமானதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அதிகாரிகள் மட்ட கலந்துரையாடலில், கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கொமோடோர் சஞ்சீவ டயஸ் அவர்களின் தலைமயிலான இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினரும் பாகிஸ்தான் கடற்படை சார்பில் பாகிஸ்தான் கடற்படை திட்ட நடவடிக்கைகளுக்கான உதவி பிரதானி கொமோடோர் ஹைபர் சமான் தலைமயிலான குழுவினரும் பங்குபற்றினர்.

இலங்கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தானிய கடற்படை அதிகாரிகள் குழுவினரை கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிரஞ்ச அத்தனகல்ல அவர்கள் வரவேற்றார்.

அயல் நாடுகள் என்ற வகையில் இருநாடுகளினதும் கடற்படையினரிடையே நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாகவும் பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்