››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைப்பு

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைப்பு

[2019/07/25]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் எம்எம்எஸ் பெரேரா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (ஜூலை, 24) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, தேசிய மாணவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் சார்பாக தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் எம்எம்எஸ் பெரேரா அவர்கள் செயலாளர் அவர்களை கௌரவித்தும், பாராட்டியும் நினைவுச்சின்னம் ஒன்றினை வழங்கி வைத்தார்.

கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவரும், இக்கல்லூரியின் கனிஷ்ட மாணவ படையணியின் சாஜன் ஆகவும், சிரேஷ்ட மாணவ படையணி கொம்பனியின் குவாட்ட மாஸ்டர் சாஜனாகவும் செயற்பட்டு, இலங்கை இராணுவ இலேசாயுத காலாட்படையின் ஆணையதிகாரம் பெற்ற அதிகாரியாகவும், அதன்பின்னர் 17 ஆவது இராணுவத் தளபதியாக இராணுவத்தின் மிக உயர்ந்த பதவிவியை வகித்து, தற்போது பாதுகாப்பு செயலாளராக பதவிவகிக்கும் அவரது வெற்றிப் பயணத்தினை பாராட்டி இந்நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்