››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி, விஜயம் செய்வதற்கு நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது

அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி, விஜயம் செய்வதற்கு நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது

[2019/08/04]

துரதிர்ஷ்டவசமான ஏப்ரல் குண்டுவெடிப்பிலிருந்து நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வழிபாட்டுத் தளங்கள், பொது இடங்கள், சுற்றுலாத் தளங்கள், அரச சேவையகங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க முப்படை, பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகள் ஆகியன ஏனைய அரச பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் விளைவாக உயித்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய பெரும்பாலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக தங்கயிருந்த வீடுகள் பல சோதனைக்குற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையர்களின் பொதுப் பாதுகாப்பிலும், நாட்டிற்கு வருகை தரும் எந்தவொரு வெளிநாட்டு பிரஜையினதும் பாதுகாப்பு தொடர்பிலும் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்களும் செய்யப்பட மாட்டாது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நாட்டின் பாதுகாப்பு உறுதிதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க தூதரகம் தமது நாட்டு பிரஜைகளுக்கு வழங்கிய பயண ஆலோசனையில் விடுமுறை நாட்களின் போதான பயணத்தின் போது தமது பாதுகாப்பு கூடுதல் அக்கறை செலுத்துமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றைத் தோற்கடித்த ஒரு நாடு என்ற வகையில், அந்தப் போரில் முன்னணியில் இருந்த இலங்கையின் பாதுகாப்புப் படைகள் எல்லா நேரங்களிலும் இந்த நாட்டிற்குள் உள்ள அனைத்து மக்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கக்கூடிய திறன்வாய்ந்தவர்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார். மேலும், நாட்டின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த அவர், இந்த நாட்டிற்கு வருகை தர விரும்பும் எவரும் அச்சமின்றி வருகை தரமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுர் வெளியிட்டுள்ள அண்மைய ட்வீட்டினை காண இங்கே கிளிக் செய்க :

https://twitter.com/USAmbSLM?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்