››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்

[2019/08/05]

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள 12ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் (2019) 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ்வருட இரண்டு நாள் மாநாடு “நவீன தொழிநுட்பங்களுக்கு முன்னாள் மனிதகுலம் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.

இவ்வருட ஆய்வு மாநாட்டில், மாநாட்டுக்கு முன்னரான செயலமர்வுகள், சுவரொட்டி விளக்கக்காட்சிகள், மூலோபாய ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு உட்பட ஒன்பது துறைகளின் தொழில்நுட்ப அமர்வுகள், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேயம், கட்டமைக்கப்பட்ட சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல், கணினி, பொறியியல், மருத்துவம், அடிப்படை மற்றும் பிரயோக விஞ்ஞானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் என்பன உள்ளடங்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த வருடம் (2018) 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு “இணக்கப்பாட்டின் மூலம் தொழில்முறை உயர்தன்மையை பாதுகாத்தல்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விஷேட பேச்சாளர்களான, 2007 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசுபெற்று புகழ்பெற்ற பேராசிரியரும், மென்செஸ்டர் பல்கலைக்கழக, பேண்தகு நுகர்வு நிறுவன மற்றும் பேண்தகு அபிவிருத்திக்குமான பேராசிரியருமான மொஹான் முனசிங்க, மற்றும் 2014 ஆம் ஆண்டில் நாசாவின் சிறந்த தலைமைப் பதக்கத்தை வென்ற நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தில் போட்டானிக்ஸ் குழுவிற்கு தலைமை தாங்கும் பிரபல விஞ்ஞானியுமான கலாநிதி சரத் டி குணபாலா ஆகிய இரண்டு புகழ்பெற்ற பேச்சாளர்களால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவலுக்கு, கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்க.

http://www.kdu.ac.lk/

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்