››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 27வது நினைவு தினம்

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 27வது நினைவு தினம்

[2019/08/08]

ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 27வது நினைவு தினமாகும்.

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள், மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமக, லெப்டினன்ட் கர்னல் எச். ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கர்னல் ஜீ. எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கர்னல் வை. என். பலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கர்னல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும்இராணுவ சிப்பாய் டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோருடன் தாய் நாட்டுக்காக உயிர்நீர்த்த சமகால போர் வீரர்களில் ஒருவராகும். இவர்கள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி யாழ்பாணம், பருத்தித்துறை அரலி முனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தின் போது உயிரிழந்தனர்.


1940 இல் பிறந்த ஜெனரல் கொப்பேகடுவ , கண்டி புனித திரித்துவ கல்லூரியில் தனது கல்வியை நிறைவு செய்தார். 1960ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள், தனது ஆரம்ப கட்ட பயிற்சி நெறியினை இராணுவ பயிற்சி நிலையத்தில் பூர்த்தி செய்த பின்னர் மேலதிக பயிற்சிக்காக பிரித்தானியாவில் உள்ள சேன்டர்ஸ்ட் இராணுவ அகடமிக்கு சென்றார். 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இலங்கை கவசப் படையணியின் இரண்டாம் நிலை லெப்டினனாக ஆணையதிகாரம் அளிக்கப் பெற்றார்.

அவர் பல வீர பதக்கங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். போர்க்களத்தில் அழியாத அடையாளத்தை வெளிப்படுத்திய ஒரு துணிச்சலான இராணுவத் தலைமைத்துவத்தை கொண்டிருந்ததால் அவருக்கு ரண விக்ரம பதக்கம், வடமராச்சி நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. மரணத்திற்குப் பின் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற அவர் விஷிஸ்டா சேவா விபூஷனய, ரண சூர பதக்கம் (இரண்டு முறை), உத்தம சேவ பதக்கம் மற்றும் தேசா புத்ரா சம்மானய ஆகிய பதக்கங்களுக்கும் சொந்தகாரராக திகழ்ந்தார். இவரது உன்னத தியாகத்தை கௌரவித்து அவரின் மனைவிக்கு 2010ஆம் ஆண்டு உத்தம பூஜா பிரணாம பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்