››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வட்டமேசை கலந்துரையாடல்

[2019/08/10]

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் நடத்தப் பட்ட வட்டமேசை கலந்துரையாடல் பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை ( ஆகஸ்ட். 09) இடம்பெற்றுள்ளது.

"தெற்காசியாவில் சர்வதேச பாதுகாப்பு சிக்கல்கள் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு" எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் பிரசித்திபெற்ற பங்கேற்பாளர்களான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு றசா ஹமீத் உள்ளிட்ட பங்களாதேஷின் வியாபார நிறுவனத்தின் ஆய்வு பணிப்பாளர் பேராசிரியர் சாஹிப் இனாம்கான் மற்றும் இலங்கை பாதுகாப்பு கற்கை நிலையத்தின் ஆய்வாளர் திருமதி கசுணி ரணசிங்க ஆகிய முக்கிய பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு கற்கைகள் நிலைய பணிப்பாளர் திரு.அசங்க அபே குணசேகர , இராஜதந்திர உறுப்பினர்கள் மற்றும் விசேட அழைப்பினை ஏற்று வருகை தந்த பலரும் கலந்து கொண்டனர்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்