››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் கிழக்கிற்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் கிழக்கிற்கு விஜயம்

[2019/08/10]

ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவத்தின் பின்னரான முப்படை மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பான சேவைகளுக்கு பாராட்டு

கிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்புப் படையினரின் நிலைகள், அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் ஆகியவற்றை ஆய்வுசெய்யும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (ஆகஸ்ட், 10 ) கிழக்கிற்கான கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர் கிழக்கு பிராந்தியத்திற்கு அவர் மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களும் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து பங்குகொண்டார்.

வெலிகந்த கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை கிழக்கு பாதுகாப்புப் படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அவர்கள் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, முப் படை, பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை சிரேஷ்ட அதிகாரிகளினால் பங்கேற்ற சிறப்பு மாநாட்டின் போது கிழக்கு பிராந்தியத்தில் படையினரின் நிலவுகை மற்றும் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான பொது நல சேவைகள் பற்றியும் செயலாளர் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இப் பயணத்தின் போது குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட சீயோன் தேவாலயத்திற்கும், புனானியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் பாதுகாப்பு செயலாளர் விஜயம் செய்தார்.

முப் படை, பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பிந்திய சவாலான சூழ்நிலையை கையாள்வதிலும், நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதிலும் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பான சேவை, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் துரித பதில் நடவடிக்கை ஆகியவற்றிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அத்துடன் அவர், கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்த அனுபவத்துடன், இப் புதிய அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள விரைவாகவும் திறமையாகவும் செயல்பட முடிந்ததாவும் குறிப்பிட்டார். மேலும் அவர்,

இச்சவாலினை படையினர் தொடர்பான நல்லெண்ணத்தை நிலைநிறுத்துவதன் மூலமும், குழப்பங்கள் அல்லது அமைதியின்மைகளை உருவாக்காமலும் நீங்கள் இதைச் செய்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர், 1983 கலவரம் பயங்கரவாதிகளுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் உணரப்படுவதையும் அவர் நினைவுபடுத்தினார். மக்களைத் தூண்டிவிடாமல், அவர்களின் இதயங்களையும் மனதையும் வென்றெடுக்க அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் போராடிய அனுவமிக்க அதிகாரிகள் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தலைமுறையினருக்கு கற்பித்து வழிகாட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முப்படை, பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     
     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்