››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கம்பஹாவில் சிவிலியன் சமூகங்களுக்கு உயிர்காப்பு கருத்தரங்கு

கம்பஹாவில் சிவிலியன் சமூகங்களுக்கு உயிர்காப்பு கருத்தரங்கு

[2019/08/13]

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் உயிர்காப்பு கருத்தரங்கு தொடர்கள் அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் நடாத்தப்பட்டது.

நீர் பாதுகாப்பு, நீரில் மூழ்குவதை தடுத்தல் மற்றும் முதலுதவி ஆகியன குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இக்கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான, குறிப்பாக மீனவ சமூகங்களுக்கு உயிர் காப்பு மற்றும் நீரில் மூழ்குவதை தடுத்தல் தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு கருத்தரங்குகளை இலங்கை கடலோர காவல்படை உயிர் காப்பு பயிற்சி பாடசாலையினால் அண்மையில் நடாத்தப்பட்டுள்ளது.

கம்பஹ மாவட்ட நிகழ்சித்திட்டத்தில் 'ரட்ட வெனுவென் எக்கட சிட்டிமு' எனும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் குறித்த கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கருத்தரங்கானது ஜூலை 30ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 04ஆம் திகதிகளில் பமுனுகம, ஹென்டல, துவ மற்றும் பிட்டபான ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சமூகங்களுக்கு நடாத்தப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்