››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய இராணுவ தளபதி பதவியேற்பு

புதிய இராணுவ தளபதி பதவியேற்பு

[2019/08/21]

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் எல்எச்எஸ்சீ சவேந்திர சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள், இராணுவ தலைமையகத்தில் இன்று (ஆகஸ்ட், 21) இடம்பெற்ற வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய இராணுவ தளபதிக்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களினால் இராணுவ மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. லெப்டினன் ஜெனரல் எல்எச்எஸ்சீ சவேந்திர சில்வா அவர்கள், இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவ தளபதி ஆவார். இவர் ஜனாதிபதியினால் இப்பதவிக்கு நியமிக்கப்பட முன்னர் இலங்கை இராணுவ அதிகாரிகளின் பிரதானியாக செயற்பட்டார்.

மார்ச் 5, 1984 அன்று லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்தின் 19வது நிரந்தர ஆட்சேர்ப்பின் போது இராணுவத்தில் இணைந்துகொண்டார். இராணுவ கலாசாலையில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த அவர், 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதியன்று கஜாபா படையணிக்கு நியமிக்கப்பட்டார்.

இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் அதிகமான சேவைகளை பூர்த்தி செய்த அவர், இராணுவத்தில் பதவிநிலை, வழிக்காட்டல், கட்டளை மற்றும் இராஜதந்திர நியமனங்கள் பலவற்றை வகித்துள்ளார். அவரின் இராணுவ சேவைக்காலத்தில் , 2005ம் ஆண்டில் அதிகாரிகள் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். பின்னர் இலங்கை இராணுவ கலாசாலையில் பயிலுனர் அதிகாரி பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டார். 1995 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலை புலிகளின் பிடியிலிருந்து யாழ்ப்பாண தீபகற்பத்தை விடுவிப்பதற்காக இலங்கை இராணுவத்தால் உருவாக்கப்பட்ட 'ரிவிரச படை நடவடிக்கையின்' இளமையான கட்டளை அதிகாரியாக செயற்பாட்டார். பயங்கரவாதிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் மிக முக்கியமான கட்டத்தில், அப்போதைய இராணுவத் தளபதியால் ஏர் மொபைல் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

2006, ஆகஸ்ட் மாதம், முகமாலை முன்னரங்கினை மீள கைப்பற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்த அவர், "வன்னி மனிதாபிமான நடவடிக்கையின்" போது அதிக வெற்றிகரமான சாதனைகளைப் பதிவு செய்த 58வது பிரிவு கமாண்டோ படையானியின் கட்டளை தளபதியாக செயற்பட்டார்.

அவரது பிரிவு இப்படை நடவடிக்கையின் போது 200 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டதுடன் இறுதி வெற்றி இலக்கினை அடையும்வரை போராடியது. மேலும் இது தமிழீழ விடுதலை புலி பயங்கரவாதிகளிடமிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை விடுவித்து புதுமாதலனில் மிகப் பெரிய பணயக்கைதிகள் மீட்பு பணியை மேற்கொண்டது. இலங்கை ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட இளைய அதிகாரி ஆவார். பின்னர், அவர் நாட்டின் ரிசர்வ் ஸ்ட்ரைக் போர்ஸ் (ஆர்.எஸ்.எஃப்) என அழைக்கப்படும் 53 பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டார்.

2010 ஆம் ஆண்டு இவர், இலங்கைக்கான ஐக்கிய நாட்டு தூதுவராகவும் பிரதி வதிவிட பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான இவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டதாரியும் ஆவார். மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பெற்ற இவர், அமெரிக்காவில் ‘உளவியல் செயல்பாடுகள்’ பயிற்சியில் தகுதி பெற்றார். வேர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள புகழ்பெற்ற மரைன் கார்ப்ஸ் போரியல் கல்லூரியில் வருகை தரும் விரிவுரையாளராகவும்கடமையாற்றினார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வீர விக்ரம விபூஷனய (டப்டப்வி), ரண விக்ரம பதக்கம (ஆர்டப்பி), ரண சூர பதக்கம (ஆர்எஸ்பி), விஷிஷ்ட சேவா விபூஷநய (விஎஸ்வி) மற்றும் உத்தம சேவா பதக்கம (யுஎஸ்பி) ஆகிய பதக்கங்களுக்கு உரித்துடையவராக திகழ்கிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் தேசத்திற்குஆற்றப்பட்ட உன்னத சேவையைப் பாராட்டும் விதமாக, இவருக்கு “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹியும் விஷாரத ஜோதிகதஜா வீரப்பிரதபா தேசமான்ய ஜாதிக கௌரவநாம சம்மான உப்பாதி சன்னஷ் பத்ரய”, “வீர கஜேந்திர சங்ரமாஷ்சுரி ஜாதிக கௌரவநாம சன்னஷ் பத்ர" மற்றும் “வீர விக்ரம தேசஅபிமானி, விஸ்வ கீர்த்தி ஶ்ரீ ரணசூர” ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டன. இது பௌத்த விழுமிய மூன்று பிரிவுகளால் இறையாண்மையையும் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான உண்மையான பக்தி மூலம் ஒரு சாதாரண நபர் பெறக்கூடிய மிகவும் மதிப்புமிக்க விருதுகள் ஆகும். புத்தரின் அறிவொளியின் 2600 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், “2600 ஆண்டுகளில் இருந்து இலங்கை அடையாளம்” என்ற நூலை வெளியிட்டார்.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சமய தலைவர்கள்,சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     
     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்