››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினர் கிளிநொச்சியில் வணக்கஸ்தலங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு

இராணுவத்தினர் கிளிநொச்சியில் வணக்கஸ்தலங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு

[2019/09/06]

அண்மையில் இலங்கை இராணுவ வீரர்கள் குழுவினர் முலங்காவில் பிள்ளையார் கோவில் வளாகம் மற்றும் காரியலங்காபட்டுவான் அந்தோனியர் ஆலய வளாகம் என்பவற்றை சுத்தம் செய்வதற்கு தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.

கடந்த மாதம் (ஆகஸ்ட்) 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெற்ற சமூக நலன்புரி திட்டத்தின் போது கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த இராணுவ வீரர்கள் ஈடுபட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கிளிநொச்சி படைவீரர்கள் கடந்த 31ஆம் திகதி (ஆகஸ்ட்) ஸ்கண்டபுரன் பிள்ளையார் கோவிலை சுத்தம் செய்யும் வகையில் மற்றுமொரு சிரமதானப் பணியையும் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான இவ்வாறான பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்களை மக்கள் நலன் கருதி முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்