››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2019/09/08]

'சொமுத்ர அவிஜான்' எனும் பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (செப்டம்பர், 07) கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த பங்களாதேஷ் கடற்படைக்கப்பலுக்கு, கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

'சொமுத்ர அவிஜான்' கப்பலானது 115.2மீட்டர் நீளத்தையும் 13.1 மீட்டர்அகலத்தை கொண்டதுடன் 3367.58 டொன் கொள்திரனையும் கொண்டது.

குறித்த கப்பல் இலங்கையில் நகூரமிட்டிருக்கும் காலப்பகுதியில் பிரசித்தி பெற்ற பல இடங்களை பார்வயிடவுள்ளதுடன் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன் கப்பலில் உலங்குவானூர்தி தரையிறக்கும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குஇலங்கை கடற்படையினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இக்கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்