››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

[2019/09/11]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 12வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று (செப்டெம்பர், 11) ஆரம்பமானது. இரு நாட்களைக்கொண்ட இவ் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரம அதிதியாக கலந்துகொண்டார்.

இம்மாநாடு பல்வேறு நிபுணதத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தமது தரம்வாய்த ஆய்வு முடிவுகளை முன்வைக்கும் ஒரு உலகத் தரம்வாய்த மன்றமாகும். “புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதில் மனிதகுலம் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இவ்வருட ஆய்வு அரங்கு இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது. இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள், சட்டம், முகாமைத்துவம், பொறியியல், சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் வெளி அறிவியல்,கணனியியல், மருத்துவம், அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல், ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானம் ஆகிய விடயதானங்களை உள்ளடக்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் ஆரம்ப உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் அவர்கள், இந்த மாநாட்டின் போது சமர்பிக்கப்படும் அறிவு மற்றும் கருத்துக்கள் கல்வி சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு மகத்தான நன்மை பயக்க கூடியதாகும் என தெரிவித்ததுடன் காலத்துக்கு ஏற்றவகையில் மிகவும் சரியான மற்றும் பொருத்தமான கருப்பொருளைத் தேர்ந்தெடுத்த துணைவேந்தர் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டாளர்களை பாராட்டி தமது நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வுபெற்ற அட்மிரல் தயா சந்தகிரி , கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயல் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. அனுருத்த விஜேகோன், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், கல்விமான்கள், மற்றும் பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 



 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்